ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,
மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மேஷம்.
1-3-2020- ரிஷபம்.
3-3-2020- மிதுனம்.
5-3-2020- கடகம்.
7-3-2020- சிம்மம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 4, பூரட்டாதி- 2.
செவ்வாய்: பூராடம்- 1.
புதன்: அவிட்டம்- 1, 2.
குரு: பூராடம்- 4.
சுக்கிரன்: ரேவதி- 4.
சனி: உத்திராடம்- 1.
ராகு: திருவாதிரை- 1.
கேது: பூராடம்- 3.
கிரக மாற்றம்:
புதன் வக்ரம்,
2-3-2020- புதன் வக்ரநிவர்த்தி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு சாரம்கொடுத்த சுக்கிரன் 12-ல் உச்சம். வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சி. அவருடன் 10-க்குடைய சனி சேர்க்கை. அதனால் தர்மகர் மாதிபதி யோகம் உண்டாகிறது. எனவே, உங்கள் முயற்சி களும், காரியங்களும், செயல்களும் நூற்றுக்கு நூறு முழு வெற்றியடையும். மேலும், பாக்கியாதிபதி குருவின் பார்வை ராசிக்குக் கிடைப்பதால் குருவருளும் திருவருளும் பெருகும். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்பது குறள். இந்த வாரக் கோட்சாரம் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் அளவு திண்ணமாக அமைவதால், எல்லாம் நலமாகும்; வளமாகும். செய்வதைத்தான் சொல்வீர்கள்; சொல்வ தைத்தான் செய்வீர்கள். 2, 7-க்குடைய சுக்கிரன் 12-ல் உச்சம் என்பதால், திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோக மும், திருமணமானவர்களுக்கு கணவரால் அல்லது மனைவி யால் நன்மையும் உண்டாகும். கணவர் அல்லது மனைவி பெயரில் தொழில் யோகம், தனயோகம் உண்டாகும். சீரும் சிறப்பும், செல்வாக்கும் உண்டாகும். அரசுக் காரியங் களில் அனுகூலமும் ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி 2020-ல்தான் சனிப்பெயர்ச்சி. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஜனவரி மாதம் 24-ஆம் தேதியன்று பெயர்ச்சியாகிவிட்டது. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. சனிக்குரிய அதிகார ஸ்தலம் திருநள்ளாறுதான். அங்கு வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்படுகிறது. அதேபோல குருவுக்குரிய ஸ்தலம் ஆலங்குடி. அங்கும் வாக்கியப் பஞ்சாங்கப் படிதான் குருப்பெயர்ச்சி விழா நடக்கும். எனவே, 2020 முடியும்வரை ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. என்றாலும் குருவீட்டில் குருவோடு சேர்ந்து சனி இருப்பதால், அட்டமத்துச்சனியின் தாக்கம் குறையும். ஒருசிலருக்கு இடப் பெயர்ச்சி உண்டாகும். குடியிருப்பு மாற்றம், உத்தியோகத்துறையில் மாற்றம், தொழில் துறையில் மாற்றம் ஏற்படும். அட்டமத்துச்சனி நடக்கும் இக்காலம் ஜாதகரீதியாக சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் ஊர்மாற்றமும் ஏற்படலாம். அல்லது வெளிநாட்டு யோகமும் அமையலாம். அந்தமாதிரி இருந்தால் திங்கட்கிழமை தோறும் சிவலிங்கத்திற்கு பால பிஷேகம் செய்யவேண்டும். அல்லது ஒருமுறை திங்கட் கிழமை சிவலிங்கத்துக்கு ருத்ராபிஷேகப் பூஜை அல்லது ருத்ர ஹோமம் செய்யலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
துன ராசியில் ராகு நிற்கிறார். 7-ல் செவ்வாய், கேது, குரு, சனி இருக்கிறார்கள். 7-ஆமிடம் என்பது கணவன் அல்லது மனைவி ஸ்தானம். அங்கு 6-க்குடைய செவ்வாயும், 8-க்கு டைய சனியும் சேர்க்கை. அவர்களோடு கேது, ராகு சம்பந்தம். அதனால் திருமணத்தடையும் தாமதமும் ஏற்படலாம். திருமணமானவர்களுக்கு பிரச்சினைகள் எழலாம். பிரிவு, பிளவு, விவாகரத்து போன்றவையும் ஏற்பட லாம். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து, மேற்கண்ட துர்பலன்கள் நடக்க இடமுண்டு. அப்படிப்பட்டவர்கள் குடும்ப ஒற்றுமைக்கும், அன்யோன்ய தாம்பத்திய வாழ்க்கைக்கும் சூலினிதுர்க்கா ஹோமம் போன்ற ஹோமங் களைச் செய்து, கலச அபிஷேகம் செய்ய வேண்டும். ஜென்ம ராகு சிலருக்குத் தேவையற்ற அலைச்சல் திரிச்சல்களையும், விரயச் செலவு களையும் ஏற்படுத்தலாம். அல்லது கௌரவப் போராட்டங்களை சந்திக்கவைக்கும். என்றாலும் குரு 7-ல் ஆட்சி பெற்றுப் பார்ப் பதால், மலைபோல வரும் பிரச்சினைகளை பனிபோல விலக்கி சமாளிக்கலாம். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பொருளாதாரத்தில் சேமிப்புக்கு இடமில்லை என்றாலும் பாதிப்புக்கு இடமிருக்காது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 6-ல் செவ்வாய், குரு, சனி, கேது நான்குபேரும் மறைவு. 8-ல் சூரியனும், 12-ல் ராகுவும் மறைவு. எந்த வொரு பிரச்சினையிலும் சீக்கிரமாகவும், விவேகமாகவும் முடிவெடுத்து செயல்படும் உங்களுக்கு, தற்போதைய கோட்சாரம் குழப் பத்தை ஏற்படுத்தும். எதிலும் தீர்க்கமான முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். இருந்தாலும் "யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்பதுபோல, கடுமையான பிரச் சினைகளையும் எளிமையான முறையில் சமாளிக்கலாம். 11-ஆமிடத்து சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால், அந்த மனோ பலத்தையும் காரிய ஜெயத்தையும் உண்டாக்கும். மறைவு பெற்ற கிரகங்களின் தோஷம் நிறைவாகிவிடும். 2-க்குடைய சூரியன் 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தையே பார்ப்பதால் வாக்குவண்மையும், செயல் வலிமையையும் ஏற்படுத்தும். உங்களின் ஊக்கமே எல்லாவற்றிலும் ஆக்கம் ஏற்படுத்தும். தைரிய ஸ்தானாதிபதி புதனும், வெற்றி ஸ்தானாதிபதி சுக்கிரனும் ராசிக்கு கேந்திர- திரிகோணங்களில் (புதன்- கேந்திரம், சுக்கிரன்- திரிகோணம்) இருப்பதால், எல்லாவற்றிலும் சொல்லி "கோல்' அடிக்கலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். தொடக் கத்தில் ராகு சாரத்திலும் (சதயம்), பிறகு குரு சாரத்திலும் (பூரட்டாதி) சஞ்சாரம். ராகு 11-ல் இருக்கிறார். குரு 5-ல் ஆட்சிபெறுகிறார். உங்கள் கனவுகளும் திட்டங்களும் கைகூடும். நினைவுகளும் ஆசைகளும் நிறைவேறும். 2, 11-க்குடைய புதன் 6-ல் மறைவு. இருந்தாலும் "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பார்கள். பொருளாதாரத்தில் நிறைவுண்டாகும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் நாணயம் காப்பாற் றப்படும். போட்டி, பொறாமைகளைத் தூள்தூளாக்கி விடலாம். எதிர்ப்புகள் இல்லாதொழியும். சோதனைகளை விலக்கி சாதனை படைக்கலாம். வழக்கு விவகாரங்கள், கோர்ட் நடவடிக்கைகளில் வெற்றி ஏற்படும். 4, 10-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைவு பெற்றாலும் உச்சம் பெறுவதால், தொழில் துறையிலும், வேலை, உத்தியோகத்திலும் முன்னேற் றங்களை எதிர்பார்க்கலாம். மறைவு தோஷம் விலகிவிடும். பொதுவாக ஆட்சி அல்லது உச்சம் பெறும் கிரகங்களை மறைவு தோஷம் பாதிக்காது. உதாரணமாக, மேஷ ராசிக்கு 6-ல் மறையும் செவ்வாய்க்கும், ரிஷப ராசிக்கு 6-ல் மறையும் சுக்கிரனுக்கும் தோஷமில்லை.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். 2, 9-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம். 4-ல் செவ்வாய், கேது, சனி, குரு. எதிலும் நன்கு திட்டமிட்டு, தீவிர முயற்சியோடு செயல்பட்டு வெற்றிக்கனியைத் தட்டிப் பறிக்கலாம். "எட்டில் ஒரு ஏழையேனும் பத்தில் ஒரு பாவியேனும் இருக்க வேண்டும்' என்பது ஜோதிடப் பழமொழி. 8-க்குடைய செவ்வாய் 4-ல் கேந்திரம். 10-க்குடைய புதன் 5-ல் திரிகோணம். 10-ல் ராகு. எனவே, உங்கள் திட்டங்கள் வெற்றியடையும். நினைவுகள் நிறைவேறும். கருதியவை கைகூடும். காரியம் ஜெயமாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், திருமணமானவர் களுக்கு கணவரால் அல்லது மனைவியால் யோகமும் உண்டாகும். 12-க்குடைய சூரியன் 6-ல் மறைந்தாலும் 12-ஆமிடத்தைப் பார்க் கிறார். 4, 7-க்குடைய குருவும் 4-ல் ஆட்சிபெற்று 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான சுபவிரயச் செலவுகளை சந்திக்க லாம். மேற்கண்ட பூமி, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை யோகங் களையும் சந்திக்கலாம். ஒன்றைக் கொடுத்து, இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை யோகம். ஒருசிலர் மனைவி, மக்கள் பெயரில் செட்டில்மென்ட் எழுதிவைக்கலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும், அங்கு உச்சம் பெறு கிறார். எனவே, மறைவு தோஷம் பாதிக் காது. சிலர் வீடு அல்லது மனைவகையில் சீர்திருத்தம் செய்யலாம். பழைய வீட்டைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கலாம். அல்லது புதிய வீடு கட்டும் திட்டத்தை செயல் படுத்தலாம். அதற்கான கடன் உதவியும் கிடைக்கும். வங்கிக்கடன் அல்லது தனியார் கடன் அல்லது நகையை வைத்துக் கடன்பெற்று அதற்கான முயற்சிகளை நடத்தலாம். 11-க்குடைய சூரியன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். உங்களது எண்ணங்களும் திட்டங்களும் மேற்கூறிய முயற்சிகளும் செயல்வடிவம் பெறும். நீண்டநாள் கனவுகளும் நிறைவேறும். 3-ல் செவ்வாய், சனி, கேது, குரு இருப் பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகும். சகோதரவகையில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மாறி, நல்லிணக்கமும் சகாயமும் உண்டாகும். 2, 7-க்குடைய செவ்வாய் சுக்கிரனைப் பார்க்கிறார். பொருளாதாரச் சிக்கல்கள் குறையும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். 9-ல் ராகு. குருவின் பார்வை 9-ஆமிடத்துக்குக் கிடைக் கிறது. ஆன்மிகப் பிரார்த்தனைகளையும், குலதெய்வ வழிபாடுகளையும் பூர்த்தி செய்யலாம். தந்தைவழியில் பூர்வீகசொத்து சம்பந்தமான சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும், குரு பார்வையால் அவற்றை சமாளிக்கும் வழிகளும் உண்டாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல்- தனுசு ராசியில் குரு, சனி, கேது வுடன் சம்பந்தம். குரு- செவ்வாய்க்கு வீடுகொடுத்தவர். சனி- செவ்வாயின் உச்ச ராசிநாதன். (மகரத்தில் செவ்வாய் உச்சம்- மகர ராசிநாதன் சனி). எனவே, உங்களுடைய முயற்சிகள் யாவும் தளர்ச்சியில்லாமல் வளர்ச்சியடையும். கேது- ராகு சம்பந்தப்படுவ தால், சில நேரங்களில் சில காரியங்களில் பின்ன டைவும் தன்னம்பிக்கையும் குறையும். என்றாலும் ராசிநாதன் குருவோடு தன ஸ்தானத்தில் சம்பந் தப்படுவதால், "காதல் அரம்பையர் கடைக்கண் காட்டிவிட்டால் மாமலை இமயமும் ஓர் கடுகாகிவிடும்' என்று ஒரு கவிஞர் பாடிய மாதிரி, சீறிவரும் வேங்கைபோல வீறுகொண்டு வெகுண்டெழுந்து வெற்றி முத்திரைப் பதிப்பீர்கள். 8-ல் உள்ள ராகுவும், அவரைப் பார்க்கும் செவ்வாய்- சனியும் முதுகில் குத்தும் துரோகிகளுக்கு மத்தியில் ஜுலியஸ் சீசர், "யூ டூ புரூட்டஸ்' என்று சொன்னதுபோல, அவர்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். திருமணத்திற்குமுன் தாயும், திருமணத்திற்குப்பின் தாரமும் வழிநடத்துவார்கள். அதனால்தான் "தாய்க்குப்பின் தாரம்' என்றார்கள். ஒரு சிலருக்கு தாரம் அற்புதமாக அமையும். ஒருசிலருக்கு தாரம் அவதாரமாக அமையும். அது அவரவர் ஜாதகப்பலனைப் பொருத்தது. தாரமும் குருவும் தலை விதிப்படி!
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார். 6, 11-க்குடைய சுக்கிரன் சாரத்தில் பூராடத்தில் இருக்கிறார். சுக்கிரன் 4-ல் உச்சம்! சுக்கிரனும் குருவும் பகை என்பார்கள். அது தவறான கணிப்பு! குரு- தேவர்களுக்கு குருநாதர். சுக்கிரன்- அசுரர் களுக்கு குருநாதர். தேவர்களுக்கும் அசுரர்களுக் கும்தான் பகை; மோதிக்கொள்வார்கள். குருவுக்கும் சுக்கிரனுக்கும் பகையில்லை. குருவும் சுக்கிரனும் வாதி- பிரதிவாதிகளுக்கு வக்கீல்போல! நீதிமன்றத்தில் இரு வக்கீல்களும் காரசாரமாக வாதிட்டாலும், நீதிமன்றத்துக்கு வெளியே ஒன்றுசேர்ந்து காபி சாப்பிடப் போவார்கள். குருவும் சுக்கிரனும் நேர் பகை யென்றால், குருவின் வீடான மீனத்தில் சுக்கிரன் உச்சம்பெற முடியாதல்லவா? 5, 12-க்குடைய செவ்வாய் ஜென்ம ராசியில் அமர்ந்து சுக்கி ரனைப் பார்க்கிறார். கணவன்- மனைவிக்குள் நல்லுறவும், அன்யோன்யமும், அன்பும் நட்பும் மலரும். அதேபோல மக்கள்வகையில் மகிழ்ச்சி யும் மனநிறைவும் பெருகும். வளரும் பிள்ளை களின் எதிர்காலம் குறித்துப் பெற்றோர்கள் பெரும்திட்டங்கள் தீட்டி செயல்படலாம்; சிறப் படையலாம். ஒருசிலர் பிள்ளைகளுக்கும், பேரன்- பேத்திகளுக்கும் எதிர்கால இன்ப வாழ் வுக்காக சிறுசேமிப்பு, வைப்புநிதி வைக்கலாம். ஒருசிலர் ஆயுள் இன்ஸ்யூரன்ஸ் போன்ற நிதித்திட்டங்களை வகுக்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சிலர் வாகனப் பரிவர்த்தனை செய்யலாம். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க லாம். ராகு- கேது, சனி சம்பந்தப்படுவதால், அந்த திட்டங்கள் தாமதமாக நிறைவேறும்; தடைப்படாது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். என்றாலும் சனிக்கு வீடுகொடுத்த குரு ஆட்சியாக சேர்ந்திருக்கிறார். அவருடன் மகர ராசியின் உச்சநாதனான செவ்வாயும் சேர்க்கை. தேக ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் பெருகும். ஸ்தாபனம் விருத்தியடையும். கிளைகள் பெருகும். தொழில் அபிவிருத்தி அடைவதோடு, பதவிகளிலும் முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். ஊதிய உயர்வும் அடையலாம். 6, 9-க்குடைய புதன் ஜென்ம ராசியில் செவ் வாயின் சாரம் பெறுவதால் (அவிட்டம்), உங்கள் வளர்ச்சி ஒருசிலருக்கு பொறாமையாக மாறி தளர்ச்சியடையச் செய்யலாம். ஆனாலும் "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பதுபோல, 5, 10-க்குடைய சுக்கிரன் உச்சம் பெறுவதால் எந்த பாதிப்புக்கும் இடமிருக்காது. 6-ல் ராகு இருப்பது உங்கள் விரோதிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் தடுப்புச் சுவர் எழுப்பியமாதிரி பாதுகாப்பாக அமையும். பொருளாதாரத்தில் நிறைவான பலனை எதிர்பார்க்கலாம். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாகும். கொடுக்கவேண்டிய பாக்கிகள் ஓடியடையும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் அனுதா பத்திற்குரியவர்கள் என்பது எனது ஜோதிடக் கணிப்பு. அதற்குக் காரணம், ராசிநாதனே விரயா திபதியாகவும் வருகிறார். அதாவது தனக்குத் தானே எதிரி! சிலருக்கு வீட்டுக்குள்ளேயே எதிரிகள் இடைஞ்சல் செய்வார்கள். கும்ப ராசிக்காரர்கள் வெளியில் எளிதாக சமாளித்து விடலாம். வீட்டினரை சமாளிப்பது கடினம். அதனால்தான் இவர்கள் அனுதாபத் திற்குரியவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். ஜாதக அமைப்பும், கிரகங்கள் சாதக அமைப்பும் அற்புதமாக அமைந்தால், ஓட்டப்பந்தயத்தில் முயலையும் ஆமை ஜெயித்துவிடலாம். கவிஞர் வாலியிடம் கலைவாணர் "முயல்- ஆமைக் கதையில் முயல் ஏன் தோற்றது' என்று கேட்டார். வாலி வெகுநேரம் யோசித்து, "முயலாமையால் தோற்றது' என்றார். அதற்கு கலைவாணர், "சரியாகச் சொன்னாய்! இருந்தாலும் லேட்டாகப் பிழைத்துக் கொள்வாய்' என்று சொன்னார். ஏனென்றால், யோசித்து, தாமதமாக பதில் சொன்னார் என்ப தற்காக! சனி ராசியைப் பார்ப்பதால், உங்கள் எல்லாக் காரியங்களும் தாமதமானாலும் நிறைவேறிவிடும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறு கிறார். அவருடன் 2, 9-க்குடைய செவ்வாய் சம்பந்தம். 11-க்கு 12-க்குடைய சனி சம்பந்தம். செவ்வாய்- குரு சேர்க்கை தர்மகர்மாதிபதி யோகம். தாத்தா காலத்தில், "தனவந்தர்', "செல்வந்தர்', "பஞ்சாயத்து நாட்டாமை' போன்ற பெரும் புகழுக்கும் அந்தஸ்துக்குமுரிய வாழ்க்கை வாழ்ந்த காலம்! தகப்பனார் காலத்தில் சுகவாசியாக இருந்து, அதை செயல் படுத்திய காலம்! உங்கள் காலத்தில் "பசித்தவன் பழங்கணக்கு பார்த்த நிலை'யில், மாடு அசை போடுவதுபோல முன்னோர்கள் நினைவில் கற்பனையில் மிதக்கும் காலம்! என்றாலும் தர்மகர்மாதிபதி சேர்க்கையின் பலனாக, உங்கள் காலத்தில், இடிந்த கோபுரத்தை சீர்திருத்தம் செய்து எழுப்பி, கும்பாபிஷேகம் செய்து நடத்தும் காலமாக மாறும். ஆங்கி லேயர் நாட்டில் சோம்பேறித்தனமாக- ரவுடித் தனமாக சுற்றித்திரிந்த ஒரு இளைஞனை, அவன் தாயார் "கிழக்கிந்திய கம்பெனி'யில் சேர்த்து "எங்கேயாவது போகட்டும்' என்று இந்தி யாவுக்கு அனுப்பினார். அவன் படிப்படியாக வளர்ந்து, தன் திறமையால் இந்திய நாட்டின் உயரதிகாரியாகப் பதவி வகித்தான். அவர் தான் "ராபர்ட் கிளைவ்'. அதுமாதிரி தந்தை காலத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்று, உயர்வடைய வாய்ப்புண்டு.